வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன், அதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் குறித்த கைதி திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் அவரைக் தாக்கியுள்ளதாக உயிரிழந்த கைதியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.