Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ், நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின்கீழ், 100 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முடிந்து, அந்தப் பேருந்துகள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவை அதிகரிப்பு, முக்கிய பிராந்திய போக்குவரத்து மற்றும் சுற்றுலா மையங்களாக கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் முக்கியத்துவம், மற்றும் கொழும்பு பெருநகரப் பகுதிக்கு அப்பாலும் நவீன பொதுப் போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ பேருந்து திட்டத்தின் முதற்கட்டத்தை அந்நகரங்களில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், 2026 மார்ச் 06 அன்று வழங்கப்பட்ட 100 பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தின் கீழேயே, அரசின் கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக 50% மீண்டும் கொள்வனவுக் கட்டளையாக மேலும் 50 தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்ய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பகிர்க: Facebook Twitter