Tuesday, 23 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பகிர்க: Facebook Twitter