நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய நகர அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன்கீழ் ‘நட்பு நகரம்’ எனும் பெயரிலான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
‘பொதுமக்களின் மற்றும் பிரதேச சமூகங்களின் வசதிகள் மற்றும் நல்லாரோக்கியத்திற்கான சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்தல்’ எனும் பிரதான நோக்கத்துடன் கூடிய இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 நகரங்களில் ஒரு அத்தியாவசிய அபிவிருத்திப் பணி என அடையாளங்கண்டு, குறித்த பணிகள் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, ‘நட்பு நகரம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ள 23 நகரங்களுக்கான உத்தேச கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 581 மில்லியன் ரூபாய்களை ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!