Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அனோஜன் விவகாரம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

அனோஜன் விவகாரம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற இன வேறுபாடுகளுக்கு அப்பால், சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான முயற்சிகள் தொடரும் நிலையில், சில விஷமிகளின் கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான கலந்துரையாடல்களிலும் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதை அவதானிக்க முடிவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதையும், விஷமத்தனமான பேச்சுகள் மற்றும் முகநூல் பதிவுகளைப் பகிர்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter