Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificates) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் திறம்படத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வினவல்களை இலகுவாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி 2026 செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுக்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலம் செய்திகளை அனுப்புவதற்காக மட்டும் 071-8595950 என்ற விசேட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை வட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பவும், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுடன் செய்திகளைப் பரிமாறிக்கொண்டு வினவல்களைச் செய்யவும் இதன் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter