Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரண்!!

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரண்!!

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தையும் சபாநாயகர் இன்று பாராளுமன்றுக்கு அறியப்படுத்தினார்.

அதன்படி குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதற்கமைய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றின் இந்த தீர்மானத்தை சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

பகிர்க: Facebook Twitter