Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பு!

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பு!

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் திணைக்களத்திற்குள் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த பற்றாக்குறையை முகாமை செய்து, குறிப்பாகக் கீழ்நிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter