Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு அண்மையில் வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் இன்று (22) வியாழக்கிழமை மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை இப் பிராந்தியங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீட்டர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையினூடாக காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter