Tuesday, 8 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

22வது திருத்தம் தொடர்பில் ஐ.நா.வில் விளக்கமளிப்பு!

22வது திருத்தம் தொடர்பில் ஐ.நா.வில் விளக்கமளிப்பு!

நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கும் அவசியமான சீர்திருத்தமாகவே 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் மனித உரிமைகள் நிலையை சமநிலையான மற்றும் பலனளிக்கக்கூடிய முறையில் மதிப்பிடுமாறு இலங்கை இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கேட்டுக்கொண்டது.

அத்துடன், நியாயமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவையும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கோரினார்.

பகிர்க: Facebook Twitter