கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி வரையிலான புள்ளிவிவரத் தரவுகளின்படி, மனித-யானை மோதலினால் 207 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 88 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க குறிப்பிட்டார்.
நிலவும் வறட்சியான வானிலையுடன் காட்டு யானைகளின் நடமாட்டம் உயர்மட்டத்தில் காணப்படுவதால், அதுகுறித்து பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.