நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,661 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும்.
இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் தொடர்ந்து நீடிப்பதுடன், இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தப் பிராந்தியத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் இந்த வேளையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.