Wednesday, 29 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

ஜப்பானின் கியூஷூ தீவில் நிலநடுக்கம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானின் கியூஷூ தீவில் நிலநடுக்கம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவாகக் கருதப்படும் கியூஷூ (Kyushu) தீவில் நேற்றையதினம் ரிக்டர் அளவில் 7.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்க: Facebook Twitter