Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறித்த கப்பல் தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது.

எனினும் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இத்தாக்குதல்களினால் மூன்று கப்பல்களும் சேதமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

இதேவேளை ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடைகளுக்கான விலக்கையும் அமெரிக்கா இரத்து செய்துள்ளது.

கப்பல்கள் மீதான இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள கட்டார் மற்றும் சவூதி அரேபியா, தங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

பகிர்க: Facebook Twitter