Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாளை முதல் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவு!

நாளை முதல் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 லட்சம் முதியவர்களுக்காக, 3,493,915,000.00 ரூபாய் நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது.

கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:

முதலாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபாய்.

இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபாய்.

அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை மேலும் அறிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter