Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

‘பிக்மீ’யால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்றையதினம் சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பிக்மீ செயலி மூலம் வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்தக்கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதேசசபைக்கு வருகை தந்து தவிசாளர் தலைமையில் கூட்டம் ஒன்று உடனடியாக ஒழுங்கு செய்யப்பட்டு முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராயப்பட்டது.

பகிர்க: Facebook Twitter