பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.