Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மே மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

மே மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

மே மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 18,533 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 40% ஆகும்.

அத்துடன், இக்காலப்பகுதியில் சீனாவிலிருந்து 3,472 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,517 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,441 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் மே 10 வரை இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 922,883 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவில் இருந்து 208,451 பேரும், ரஷ்யாவிலிருந்து 74,628 பேரும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 91,362 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter