Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கேப்பாப்புலவில் 6.97 ஏக்கர் நிலம் விடுவிப்பு!!

கேப்பாப்புலவில் 6.97 ஏக்கர் நிலம் விடுவிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 6.97 ஏக்கர் நிலம், பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால், இந்த நிலம் முறைப்படி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ. உமாமகேஸ்வரன் முன்னிலையில் இந்த ஒப்படைப்பு இடம்பெற்றது.

அத்தியாவசிய தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்குத் தேவைப்படும் பகுதிகளைத் தவிர, பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிலிருந்த நிலங்களை படிப்படியாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கும், பொதுப் பயன்பாட்டிற்காக அவற்றை கிடைக்கச் செய்வதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள கொள்கையின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் 59-வது படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன் தனது நன்றியை இந்நிகழ்வில் போது தெரிவித்தார்.

பகிர்க: Facebook Twitter