Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

இன்றைய வானிலை அறிக்கை!

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்றும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் களுத்துறை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, கடல் பிராந்தியங்களில் களுத்துறை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

அதனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பகிர்க: Facebook Twitter