Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையில் மண்சரிவு!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையில் மண்சரிவு!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் சீரற்ற வானிலை நிலைமை குறைந்து சீரான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் அப்பாதையில் சரிந்து விழுந்த மரங்களையும் மண் மேட்டையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லத்தண்ணி பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பகிர்க: Facebook Twitter