முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றுள்ளனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகளில் சென்று குறித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அந்த தேடுதல் முயற்சி தோல்வியடைந்ததுடன், இன்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.