Saturday, 25 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியுள்ளதாகத் தகவல்!

ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியுள்ளதாகத் தகவல்!

2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் குறிப்பாக 3,089 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை 03 மட்டுமே என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 2025ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அநுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter