நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அத்துடன் அவரது பிணைதாரர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.