எரிபொருள் சிக்கலில் இருந்து எமது தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர்.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தாதது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அவர்கள் ஒரு கொள்கையில் உள்ளனர். எவ்வாறாயினும் தற்போது இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், சேவையில் இருந்து விலகுமாறு அனைத்து பேருந்து உரிமையாளர்களும் வலியுறுத்துகின்றனர். எனினும் நாங்கள் சங்கமாகத் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி, இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை அறிவிப்போம்- என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.