Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பௌத்த பிக்குவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

பௌத்த பிக்குவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று (29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபடவர்கள்,
‘சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது’,
‘மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும்’,
‘குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும்’,
‘சிறார்களைக் காப்போம் குற்றங்களை நிறுத்துவோம்’,
‘சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை’
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter