Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு!

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளமை சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் தெபுவன – நொபட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தெபுவன – நொபட தபால் நிலையத்திற்கு அருகிலேயே குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter