Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு- வர்த்தகர் ஒருவர் பலி!

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு- வர்த்தகர் ஒருவர் பலி!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளமை சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிதாரியை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter