Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேண வரி முறையைச் சீரமைக்க வேண்டும்- IMF கோரிக்கை!

இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேண வரி முறையைச் சீரமைக்க வேண்டும்- IMF கோரிக்கை!

இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேணுவதோடு, வரி அமைப்பின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் இடைக்கால வருவாய் மூலோபாயமொன்றை உருவாக்கிச் செயல்படுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரச் சீரமைப்பிற்கு வரி முறையை மேலும் திறம்பட்டதாகவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி மற்றும் நியாயம் வழங்கக்கூடியதாகவும் மாற்றுவது அவசியமாகும்.

இதன் மூலமே நாட்டின் வருவாய் ஈட்டும் திறனைத் தொடர்ந்து பேண முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து வரி வலைப்பின்னலை விரிவுபடுத்துவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்பொழுது நடைமுறையிலுள்ள பல்வேறு வரி விலக்குகள் மற்றும் வரி ஊக்கச்சலுகைகளை சீரமைத்து, அவசியமற்றவற்றை நீக்கி நியாயமான முறையில் முறைப்படுத்துவது மிக முக்கியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிர்க: Facebook Twitter