Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தொடரும் மழைவீழ்ச்சி- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தொடரும் மழைவீழ்ச்சி- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது பெய்துவரும் மழையால் இதுவரை சுமார் 35 சிறிய நில சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி இமாயா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அச்சம்பவங்கள் சிறிய அளவிலானவை என்றபோதிலும், நிலவும் மழைவீழ்ச்சிக்கு மத்தியில் அவை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக்வும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதுடன், இம்மழைவீழ்ச்சியின் தீவிரத்தன்மை மேலும் தொடருமானால் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறக்கம் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற நில சீர்குலைவு அபாயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை பாரிய அளவிலான நில சீர்குலைவு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், சிறிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது மண்சரிவு அபாயம் கொண்ட 14 மாவட்டங்கள் காணப்படுவதுடன், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சியின் தீவிரத்தன்மை மேலும் அதிகரித்தால், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனச் சிரேஷ்ட புவியியலாளர் சுட்டிக்காட்டினார்.

மண்சரிவு எச்சரிக்கைகள் பிராந்திய ரீதியாக வெளியிடப்படுவதால், தத்தமது பகுதிக்குரிய எச்சரிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, இதற்கு முன்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக அபாயகரமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் அவ்வறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்துகிறது.

பகிர்க: Facebook Twitter