செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 9,181,696,250) வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 2,120,856,250) செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்த நிதியை பயனாளிகள் நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.