Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

போலி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் பண மோசடி- சந்தேகநபர் கைது!

போலி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் பண மோசடி- சந்தேகநபர் கைது!

போலி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் (15) களுத்துறை நகரப் பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர் குறித்த சொத்து தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சொத்தினை ஒரு கோடி ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter