Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு!

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு!

கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலை சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியிலும் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter