ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ராஜினாமா இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வருவதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, பத்தாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.