Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter