Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தெஹிவளை பகுதியில் வீடு ஒன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்- சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

தெஹிவளை பகுதியில் வீடு ஒன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்- சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

10 மற்றும் 14 வயதுகளையுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இக்கைக்குண்டுத் தாக்குதல் இன்று (11) அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter