Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தெஹிவளை பகுதியில் வீடு ஒன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்- மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை!!

தெஹிவளை பகுதியில் வீடு ஒன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்- மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை!!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்தநிலையில் தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter