Friday, 11 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை!!

பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை!!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டிற்கு 4ஆவது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியாஜனாதிபதி பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.

மொஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த புடினை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங்க் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்றது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் கூறியிருப்பதாவது:

18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter