Thursday, 10 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது!

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது!

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) இரவு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பகிர்க: Facebook Twitter