Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

14 மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

14 மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter