Friday, 14 August 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் நான்கு பணியாளர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகநேசனின் ஏற்பாட்டில், தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter