Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்து!!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்து!!

புத்தல – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில், மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பேருந்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், வேறு எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடக்கும் போது பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட சுமார் பத்து பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter