Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த புதன்கிழமை கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினால் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடந்த 21ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பிலான தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றத் தவறியமை காரணமாகவே நீதியமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரையில் வாய்மூல விடையை எதிர்பார்த்து முன்வைக்கப்படும் கேள்விகளுக்காக நேரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் முற்பகல் 11 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் உள்ள வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter