தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதிய (EPF) தரவுக் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் EPF கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் குறித்த இரு நாட்களிலும் முன்னெடுக்கப்படமாட்டாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த இரண்டு நாட்களிலும் கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் பதிவு செய்தல் உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் இடம்பெறாது என்பதால், அந்த நாட்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியுள்ள அனைவரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் எந்தவொரு அலுவலக நாளிலும் உரிய தொழில் அலுவலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தொழில் திணைக்களம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.