ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் பல்வேறு போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடையாளம் காணப்படாத 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.