Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது!

ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது!

லங்கா பிரீமியர் லீ க்தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், விளையாட்டு ஊழலுக்கு எதிராக உலகின் மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகின்றது.

இச்சட்டம் போட்டி மோசடி , ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் ஏனைய முறைகேடுகளைக் குற்றச்செயல்களாக வரையறுப்பதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறிழைப்பவர்களுக்கு கணிசமான அபராதங்களும் சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter