Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது!

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது!

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட குறித்த நகர சபை உறுப்பினரை, ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter