Tuesday, 23 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு!

கிணற்றில் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

பிரமந்தனாறு, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

தாயும் குழந்தையும் அருகிலுள்ள அயலவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது, தனது கணவருக்கு உணவு வழங்குவதற்காகக் குழந்தையை அயலவர் வீட்டிலேயே விட்டுவிட்டுத் தாய் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர், அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணாததால், அக்குடும்பத்தினர் தாயிடம் சென்று குழந்தை வீட்டிற்கு வந்துள்ளதா? என வினவியுள்ளனர்.

அங்கும் குழந்தை இல்லாததால் பதற்றமடைந்த அவர்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் குழந்தை விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். உடனடியாகக் குழந்தையை மீட்டு, தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter