Monday, 7 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணமாக ஊவா மாகாணம்!

5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணமாக ஊவா மாகாணம்!

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார்.

போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாக பதுளை போதனா வைத்தியசாலையில் விழிப்புணர்வுத் திட்டம் நேற்றையதினம் நடைபெற்றது.

இதில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி, அதிபோசணை (Overnutrition) அதாவது தேவையற்ற முறையில் உடல் எடை அதிகரித்தல் என்ற நிலையும் அதிகமாகக் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஊட்டச்சத்து குறித்த அறிவு மட்டம் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter