Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வயிற்றுக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சாரதி உயிரிழப்பு!

வயிற்றுக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சாரதி உயிரிழப்பு!

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால் உயிரிழந்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் தங்காலை – மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்து ஒன்றில் பணியாற்றிய, ஓகவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே இந்தச் சாரதி திடீரென கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்டு அவர் சிகிச்சைக்காக தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (9) தங்காலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வயிற்றிலிருந்த அந்த இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகளில் ஒன்று உடைந்ததால், அந்தப் போதைப்பொருள் உடலின் உட்பகுதியில் இரத்தத்துடன் கலந்து ஏற்பட்ட விஷமே இந்த மரணத்திற்குக் காரணம் என மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter